லக்னோ: வரும் 2022ம் ஆண்டு, நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: உ.பி.,யில் நல்ல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இல்லை. சீரற்ற மின்சார விநியோகம் காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். டில்லி மாடல் நிர்வாகத்தை அடிப்படையாக வைத்து ஓட்டுகளை கேட்போம். இலவச மின்சாரம், உலக தரம் வாய்ந்த மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் அங்கு அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால், 2வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE