தூத்துக்குடி: மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுவிட்டு, ரஜினியுடன் இணைந்து களமிறங்க தயாராக உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுவிட்டு, ரஜினியுடன் இணைந்து களமிறங்க தயாராக உள்ளேன். அ.தி.மு.க.,வின் நீட்சியாக இதை சொல்லவில்லை. எம்.ஜி.ஆரின் நீட்சியாக எந்த நடிகரும் இருக்கலாம். எம்ஜிஆர்., தி.மு.க.,வின் திலகமும் அல்ல. அ.தி.மு.க.,வின் திலகமும் அல்ல. அவர் மக்கள் திலகம்.

எங்களின் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்? சென்றால், தடுப்பது ஏன்? ஒவ்வொரு இடத்திலும் எங்களின் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. விஸ்வரூபம் என்பது யார் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்ட பதிவு:
புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.
எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். #எதுவும்_தடையல்ல pic.twitter.com/Tvp0x7d8tc
— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2020
இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு. #சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல
— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE