பொது செய்தி

இந்தியா

ஆயிரம் ரூபாயுடன் மும்பைக்கு வந்தவர் என் தந்தை: மார்கிடம் மனம் திறந்த அம்பானி

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
மும்பை: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்குடன் கலந்துரையாடிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, தனது தந்தை 1960-களில் ஆயிரம் ரூபாயுடன் நம்பிக்கை மற்றும் திறமையை முதலீடாக கொண்டு தொழில் தொடங்கியவர் என குறிப்பிட்டார். 'ப்யூல் ஃபார் இந்தியா 2020' என்ற 2 நாள் கருத்தரங்கை பேஸ்புக் நடத்துகிறது. இந்தியாவில் டிஜிட்டல் தளத்தில் இருக்கும் வளர்ச்சி வாய்ப்புகள்

மும்பை: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்குடன் கலந்துரையாடிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, தனது தந்தை 1960-களில் ஆயிரம் ரூபாயுடன் நம்பிக்கை மற்றும் திறமையை முதலீடாக கொண்டு தொழில் தொடங்கியவர் என குறிப்பிட்டார்.latest tamil news'ப்யூல் ஃபார் இந்தியா 2020' என்ற 2 நாள் கருத்தரங்கை பேஸ்புக் நடத்துகிறது. இந்தியாவில் டிஜிட்டல் தளத்தில் இருக்கும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து இந்நிகழ்வில் விவாதிக்க உள்ளனர். இன்று தொடங்கிய நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இருவரும் காணொளி மூலம் பங்கேற்று நீண்ட நேரம் உரையாடினர்.

கடந்த ஏப்ரல் மாதம் பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்துள்ளது. அதன் பிறகு வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தும் சேவையை பேஸ்புக் தொடங்கியது. இந்தியாவில் ஜியோ - வாட்ஸ்அப் கூட்டணி ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி பிரதானமாக இருவரும் விவாதித்தனர். முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி அஞ்சலட்டை விலைக்கு தொலைப்பேசி அழைப்புகள் இருக்க வேண்டும் என விரும்பியது பற்றி குறிப்பிட்ட மார்க், அவரிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அது குறித்து முகேஷ் அம்பானி கூறியதாவது: 2000-ம் ஆண்டில், முடிந்தால் அஞ்சலட்டை விலையில் தொலைபேசி அழைப்புகளை கொடுங்கள் என ஊக்கப்படுத்தினார். 2020-ல் ஜியோ மூலம் இலவச அழைப்புகளை கொடுப்பதில் பெருமைக்கொள்கிறோம். எங்கள் நெட்வொர்க்கில் இருக்கும் 40 கோடி மக்கள் உள்ளனர். அது அவருக்கு நாங்கள் செலுத்தும் பெருமை. என் தந்தை ஒரு பள்ளி ஆசிரியரின் மகன். 1960-ல் வெறும் ஆயிரம் ரூபாயுடன் மும்பைக்கு வந்த அவர், எதிர்கால தொழில்களில் முதலீடு செய்வோம் என்ற நம்பிக்கையுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.


latest tamil news

நான் கற்ற 3 கொள்கைகள்!இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ரிலையன்ஸை கட்டியெழுப்பியதில் நான் கற்றவற்றை மீண்டும் சொல்கிறேன். அவை மூன்று அடிப்படை கொள்கைகள். முதலில், தொழில்முனைவோருக்கு, தைரியமும் தன்னம்பிக்கையும் இருப்பது முக்கியம். தொழில்முனைவோராக முதல் முயற்சியில் நாங்கள் வெற்றிபெறவில்லை. தோல்வியடையும் போது தன்னம்பிக்கை வரும். வெற்றிபெறும்போது தன்னம்பிக்கை உறுதியடையும்.

இரண்டாவது, எது செய்தாலும் அடுத்தவரின் உணர்வறிதல் மற்றும் படைப்பாற்றல் முக்கியம். ரிலையன்ஸ் நிறுவனத்தில், நாங்கள் இப்போது பல மட்டங்களில் இதைச் செய்கிறோம். எங்கள் ஊழியர்கள், எங்கள் முதலீட்டாளர்கள், சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் தேசிய நலன்களை நாங்கள் கவனித்தில் கொள்கிறோம்.

என் தந்தையிடம் கற்றுக்கொண்ட இறுதியான ஒன்று, உறவு, நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவம். ரிலையன்ஸில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களும் ஒரு பெரிய குடும்பம். இந்த பெரிய ரிலையன்ஸ் குடும்பத்திற்கு நாங்கள் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்கிறோம். திடமான நம்பிக்கை, ஆர்வம், நோக்கம் ஆகியவற்றிற்காக பிணைக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
22-டிச-202020:44:10 IST Report Abuse
Kalyan Singapore பிஸிநெஸ்மேன் அல்லாமல் அரசியல் வாதியாக இருந்து பணம் சம்பாதித்தது தான் இடிக்கிறது அமைச்சர்கள் லஞ்சம் வாங்காமலோ தொழில் தொடங்காமலோ எப்படி சம்பாதிக்க முடியும்?
Rate this:
Cancel
E.Nithish - A1 -குற்றவாளி பாஜக அடிமைகள்,இந்தியா
21-டிச-202014:06:04 IST Report Abuse
E.Nithish ஆயிரம் ரூபாயுடன் அம்பானி வந்தார்னு சொன்னால் ஆ என்று வாய்பிளக்கும் சிலர் .. இதே ஒரு தமிழன் நூறு ரூபாயுடன் முன்னேறினான் என்றால் நம்ப மாட்டார்கள் .. ஏனென்றால் வடக்கனை தூக்கிப்பிடித்தே பழக்கமானவர்கள் . பாஜக
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
17-டிச-202018:57:59 IST Report Abuse
ponssasi அம்பானியின் இந்த வரளச்சிக்கு காரணம், அவர் நாணயமற்ற வியாபாரியாக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் முதலீட்டாளர்களை கைவிட்டது இல்லை. தன்னை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தையே கொடுத்தார். அதனால் அவர் எதிர்பாத்ததை விட பலமடங்கு முதலீடு குவிந்தது, அதை வைத்து ஆட்சியாளர்கள் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அரசு கொடுப்பது விட பலமடங்கு ஊதியம் கொடுத்து அவர்கள் வாயிலாக இந்திய மண்ணில் உள்ள ஒட்டுமொத்த கனிம வளங்கள்/ பெட்ரோலியம் போன்றவற்றை தன் நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தவர். இன்னும் சொல்லிகொண்டே போகலாம், வலை தளம் போதாது.
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
19-டிச-202023:01:54 IST Report Abuse
TamilArasanநீ இப்படியே ஒப்பாரி வைத்து திரி... உன் மனைவி உன்னை திட்டினாலும் அம்பானி அதானி காரணம் என்று ஓலமிட்டு... BSNL வைத்து அவதி பட்ட எனக்கு ஜியோவின் அருமை தெரியும் - அது சரி இந்தியாவில் என்று பெட்ரோல் இருக்கு பெரும்பாலும் நாம் பிற நாடுகளில் இருந்துதான் வாங்குகிறோம்... இந்திய நிறுவனம் ரிலான்ஸ் இல்லை என்றால் அந்த இடத்தை எதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் நிரப்பி இருக்கும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X