சென்னை:'நான் எம்.ஜி.ஆர்., மடியில் வளர்ந்தவன்' என, கமல் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் வந்து விட்டால் போதும், எம்.ஜி.ஆர்., பெயரும், அவர் நடித்த படங்களின் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கும். அந்தளவுக்கு, எம்.ஜி.ஆர்., புகழ் பாடாதோர் இல்லை எனலாம். இந்த வரிசையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலும் சேர்ந்து உள்ளார்.
'டுவிட்டர்' தளத்தில், எம்.ஜி.ஆரிடம், விருதுடன் முத்தமும் பரிசாக பெற்ற, வீடியோவை கமல் வெளியிட்டுள்ளார்.அதோடு, 'தி.மு.க.,வில், எம்.ஜி.ஆர்., இருந்தபோது, அவர் தி.மு.க., திலகமும் இல்லை. தனிக்கட்சி துவங்கிய பின், அ.தி.மு.க., திலகமும் இல்லை. 'அவர் என்றென்றும் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர்., முகத்தை கூட பார்க்காதவர்களே... நான் அவர் மடியில் வளர்ந்தவன், நினைவிருக்கட்டும். எதுவும் தடையல்ல' என, கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE