சென்னை:உசிலம்பட்டி தொகுதி மக்களின், நீண்ட நாள் கோரிக்கையான, 58 கிராம திட்டக் கால்வாயில், நிரந்தரமாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ் மாநிலக் குழு தலைவர் நவமணி, துணைத் தலைவர் அல்லிக்கொடி, பொருளாளர் காசிராஜன் மற்றும் நிர்வாகிகள், நேற்று தலைமை செயலகத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.அப்போது, 'மூக்கையா தேவர் படத்தை, சட்டசபையில் திறந்து வைக்க வேண்டும்.
'உசிலம்பட்டி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்யைான, 58 கிராம திட்டக் கால்வாயில், நிரந்தரமாக தண்ணீர் திறக்க, புதிய அரசாணை வெளியிட வேண்டும்' என, மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE