அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஊழல்களை பட்டியலிடுங்கள்: ஸ்டாலின்

Added : டிச 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''ஒவ்வொரு வாக்காளரையும், கட்சியினர் சந்தித்து, அ.தி.மு.க., அரசின் ஊழல்களை பட்டியலிட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.சென்னை சைதாப்பேட்டையில், தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மறைந்த நிர்வாகிகள் நாகை முருகேசன், மேரி லுார்துசாமி, மடுவை துரை, ரூசோ ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அப்போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஸ்டாலின்

சென்னை:''ஒவ்வொரு வாக்காளரையும், கட்சியினர் சந்தித்து, அ.தி.மு.க., அரசின் ஊழல்களை பட்டியலிட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை சைதாப்பேட்டையில், தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மறைந்த நிர்வாகிகள் நாகை முருகேசன், மேரி லுார்துசாமி, மடுவை துரை, ரூசோ ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அப்போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஸ்டாலின் பேசியதாவது:வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வரும், 18ம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அனைத்து கட்சி தலைவர்களும், நானும், ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்.விவசாயிகளை, பயங்கரவாதிகள் என, கூறிய பா.ஜ.,வை, முதல்வர் இ.பி.எஸ்., ஆதரிக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார்.பா.ஜ.,வை முறைத்தால், எந்த நேரத்தில் வருமான வரித்துறை வரும்; சி.பி.ஐ., வழக்கு வரும் என, தெரியாது. எனவே, அரண்டு மிரண்டு, தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும், கட்சியினர் பார்க்க வேண்டும். அ.தி.மு.க., அரசின் ஊழல்களை, அவர்களின் தோல்விகளை பட்டியலிடுங்கள்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

ஜெகத்ரட்சகன் மனைவிமறைவுக்கு அஞ்சலி

தி.மு.க., தலைமை அறிக்கை:முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யுமான ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசூயா மறைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு, ஸ்டாலின் மலர்வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். ஜெகத்ரட்சகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்துள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-டிச-202010:02:25 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்து அதிமுக ஊழலை பட்டியலிடலாம் ..திமுக ஊழல்களை பட்டியலிட்டால் ... ஒரு நூலகம் வைக்கும் அளவிற்கு பட்டியல் நீளும் ..மஸ்டர் ஊழல் , பூச்சி மருந்து ஊழல் , கோதுமை ஊழல் , சர்க்கரை ஊழல் .........ஸ்பெக்ட்ரம் வரை பஞ்ச பூத உள்ள ...நீளும் ...பட்டியலிட ஆயுள் போதாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X