சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

தவளை கூட கவிபாடும்!

Added : டிச 15, 2020
Share
Advertisement
தவளை கூட கவிபாடும்!கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின், ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், கோபியில் சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, மாநில பொது செயலர் ஈஸ்வரன் கூறுகையில், 'பா.ஜ.,வின் இன்னொரு பிரிவாகத்தான், ரஜினியின் கட்சி இயங்க போகிறது என உறுதியாக தெரிகிறது. ரஜினியின் கட்சியால், தனி ஓட்டு வங்கி உருவாகவோ அல்லது தி.மு.க., கூட்டணி ஓட்டுகளை பிரிக்கவோ வாய்ப்பில்லை.
 பக்க வாத்தியம்


தவளை கூட கவிபாடும்!



கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின், ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், கோபியில் சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, மாநில பொது செயலர் ஈஸ்வரன் கூறுகையில், 'பா.ஜ.,வின் இன்னொரு பிரிவாகத்தான், ரஜினியின் கட்சி இயங்க போகிறது என உறுதியாக தெரிகிறது. ரஜினியின் கட்சியால், தனி ஓட்டு வங்கி உருவாகவோ அல்லது தி.மு.க., கூட்டணி ஓட்டுகளை பிரிக்கவோ வாய்ப்பில்லை. பா.ஜ., மாநில தலைவர் முருகன் சொல்வதை தான், அ.தி.மு.க.,வினர் கேட்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் தான், எங்கள் கூட்டணி' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர், 'எங்கேயோ மூலையில் ஒரு கட்சியை உருவாக்கி, இருக்கிற இடமே தெரியாம கிடக்குற கட்சியின் தலைவரு, தன் கட்சியை பற்றி யோசிக்காமல், தி.மு.க.,வை நினைத்து கவலைப்படுறாரே...' என்றார். அருகிலிருந்த மூத்த நிருபர், 'தேர்தல் வந்தா, தவளை கூட கவிபாடும்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X