தவளை கூட கவிபாடும்!
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின், ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், கோபியில் சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, மாநில பொது செயலர் ஈஸ்வரன் கூறுகையில், 'பா.ஜ.,வின் இன்னொரு பிரிவாகத்தான், ரஜினியின் கட்சி இயங்க போகிறது என உறுதியாக தெரிகிறது. ரஜினியின் கட்சியால், தனி ஓட்டு வங்கி உருவாகவோ அல்லது தி.மு.க., கூட்டணி ஓட்டுகளை பிரிக்கவோ வாய்ப்பில்லை. பா.ஜ., மாநில தலைவர் முருகன் சொல்வதை தான், அ.தி.மு.க.,வினர் கேட்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் தான், எங்கள் கூட்டணி' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர், 'எங்கேயோ மூலையில் ஒரு கட்சியை உருவாக்கி, இருக்கிற இடமே தெரியாம கிடக்குற கட்சியின் தலைவரு, தன் கட்சியை பற்றி யோசிக்காமல், தி.மு.க.,வை நினைத்து கவலைப்படுறாரே...' என்றார். அருகிலிருந்த மூத்த நிருபர், 'தேர்தல் வந்தா, தவளை கூட கவிபாடும்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE