அவமதிப்பு வழக்கு :பிரசாந்த் பூஷன் மனு

Added : டிச 15, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில்,மனு தாக்கல் செய்யப்பட்டது. டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதி களையும் கடுமையாக விமர்சித்து, சமூக வலைதள பக்கத்தில், பதிவுகளை வெளியிட்டார்.உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, அவருக்கு எதிராக நீதிமன்ற
அவமதிப்பு வழக்குபிரசாந்த் பூஷன் மனு

புதுடில்லி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில்,மனு தாக்கல் செய்யப்பட்டது.

டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதி களையும் கடுமையாக விமர்சித்து, சமூக வலைதள பக்கத்தில், பதிவுகளை வெளியிட்டார்.உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 'இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி' என, அறிவித்த நீதிமன்றம், மன்னிப்பு கேட்டால், அவரை விடுவிப்பதாக உத்தரவிட்டது.பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க மறுத்தார். அவருக்கு, 1 ரூபாய் அபராதம் விதித்து, கடந்த ஆகஸ்டில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


latest tamil news


'இந்த அபராத தொகையை செலுத்தாவிட்டால், மூன்று மாதம் சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும் விதிக்கப்படும்' என, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், 1 ரூபாய் அபராத தொகையை, பிரசாந்த் பூஷன் செலுத்தினார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, இரண்டு மறுசீராய்வு மனுக்களை, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதற்கு முன்னதாக, செப்., 12ல், உச்ச நீதிமன்றத்தில், பிரசாந்த் பூஷன் தரப்பில் மற்றொரு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தண்டனை பெற்ற ஒருவர், அதே நீதிமன்றத்தின் வேறொரு அமர்வுக்கோ, அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கோ, சம்மந்தப்பட்ட வழக்கு விசாரணையை மாற்றக் கோரும் உரிமை உள்ளது' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இருந்தது.இந்நிலையில், பிரசாந்த் பூஷனின் இரு மறுசீராய்வு மனுக்கள், நாளை விசாரணைக்கு வருகின்றன.

இந்த மறு சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன், உரிமை கோரும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி, பிரசாந்த் பூஷன் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
16-டிச-202011:34:47 IST Report Abuse
Sridhar நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமையே பறிக்கப்படவேண்டும். வங்கிகள் கடன் ரத்து, கிரேடிட்க்கார்ட், ரேஷன் கார்ட் போன்ற அரசு சலுகைகள் ரத்து என்று சரவெடியாக இல்லாவிட்டால், ஆளு ஒத்த ரூபா தானேன்னு ஒதறித் தள்ளிவிட்டு போயிகிட்டே இருப்பான். தண்டனை கொடுத்தால், அது வலிக்கவேண்டும். இல்லையேல், மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தையே சீண்டுவான்.
Rate this:
Cancel
Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா
16-டிச-202011:22:26 IST Report Abuse
Prof. A.Venkateswaran. அவர் முகத்திலுள்ள ஏளனப் புன்னகையைக் கவனியுங்கள் . நீதி மன்றத்தை அவமதித்துவிட்டு எப்படி ஒரு ரூபாயோடு தப்பி விட்டேன் பார்த்தீர்களா என்ற இறுமாப்பு தெரியவில்லை?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-டிச-202009:56:26 IST Report Abuse
sankaseshan பூஷன் தேசத்துரோகி JNK தீவிரவாதிகளுக்கு பரிந்துபேசியவன் கேஜரிவாளின் அடியாள்களிடம் கிடைத்த உதை மறந்துவிட்டது ஜாமீனில் வரமுடியாத ஜெயிலில் தள்ளவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X