பா.ஜ.,வில் இணைகிறார் மம்தா கட்சி பிரமுகர்

Added : டிச 15, 2020
Share
Advertisement
புதுடில்லி:திரிணமுல் காங்., மூத்த தலைவர் சுவெந்து அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2007ல், மம்தா தலைமையில் நடந்த நந்திகிராம் போராட்டம் வெற்றி பெற, முக்கிய காரணமாக இருந்தவர் சுவெந்து அதிகாரி. உரசல்மம்தாவுக்கு மிக

புதுடில்லி:திரிணமுல் காங்., மூத்த தலைவர் சுவெந்து அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2007ல், மம்தா தலைமையில் நடந்த நந்திகிராம் போராட்டம் வெற்றி பெற, முக்கிய காரணமாக இருந்தவர் சுவெந்து அதிகாரி. உரசல்மம்தாவுக்கு மிக நெருக்கமானவராக கருதப்பட்ட சுவெந்து அதிகாரிக்கு, புருலியா, மிட்னாபூர் உள்ளிட்ட, 13 லோக்சபா மற்றும் 86 சட்டசபை தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவெந்து அதிகாரிக்கும், மம்தாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.அதனால், கடந்த சில மாதங்களாக அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்து வந்தார் சுவெந்து அதிகாரி. இந்நிலையில், நவ., 27ல், அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக செய்தி வெளியானது. சுவெந்து அதிகாரியை திரைமறைவில் சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார் மம்தா.

இதனால் மனம் மாறிய சுவெந்து அதிகாரி, சமீபத்தில் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு முன், பிரச்னைகள் முடிந்து விட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சுவெந்து அதிகாரி, செய்தியாளர் கூட்டத்தை ரத்து செய்தார்.


பெரும் பின்னடைவு

இந்நிலையில் அவர், அடுத்த சில நாட்களில் மேற்கு வங்கம் வரவிருக்கும், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன், டில்லி சென்று, அமித் ஷாவை சந்திக்க உள்ள சுவெந்து அதிகாரிக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சுவெந்து அதிகாரி வெளியேறினால், அவருக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில், வரும் சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்.,குக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X