சாலையோரம் கொட்டப்படும் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் கொட்டப்படும்

Added : டிச 15, 2020
Share
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி குப்பைகளை சாலையோரம் கொட்டுவதால், சுற்றுசூழல் பாதிக்கிறது. நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகள் பல ஆண்டுகளாக திருக்குளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குப்பை மக்கி உரமாகும். அதை விவசாயிகளுக்கு வழங்கி வந்தனர்.நாளடைவில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமானதால்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி குப்பைகளை சாலையோரம் கொட்டுவதால், சுற்றுசூழல் பாதிக்கிறது.

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகள் பல ஆண்டுகளாக திருக்குளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குப்பை மக்கி உரமாகும். அதை விவசாயிகளுக்கு வழங்கி வந்தனர்.நாளடைவில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமானதால் அவை மக்காமல் மலைபோல் குவிந்து வருகிறது. இதனால் சுற்றுசூழல் பாதிப்பதோடு அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குப்பையை தரம் பிரித்து உரமாக்கும் திட்டத்துக்காக மேல்பாதியில் இடம் வாங்கப்பட்டது.

அங்கு ரூ. 80 லட்சம் செலவில் சிமன்ட் களம் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்தனர். ஆனால், இங்கு ஒரு நாள் கூட குப்பை உரம் தயாரிக்கப்படவில்லை.தொடர்ந்து திருக்குளம் பகுதியிலேயே குப்பையை சேமித்து வந்தனர். அங்குள்ள குப்பையை மக்கும் மக்காத குப்பையாக தரம் பிரித்து சுத்தம் செய்து கொள்ள தனியார் நிறுவனத்துக்கு ரூ. 72 லட்சத்துக்கு டெண்டர் விட்டனர். அதற்கான பணி நடப்பதால் அங்கு குப்பையை கொட்ட முடியவில்லை. இதனால் தனியார் காலி இடங்களிலும் பெண்ணையாற்றின் கரையிலும் அங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலிலும் கொட்டுகின்றனர்.

இதனால் சுற்றுசூழல் பாதிக்கிறது. கடந்த வாரம் ஆற்றின் கரையில் குப்பை கொட்ட சென்ற லாரியை மடக்கிய விவசாயிகள், அங்கு குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X