ரிஷிவந்தியம் : கீழ்பாடியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா ரத்தானதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 86 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் துவங்கப்படும் அம்மா மினி கிளினிக், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்பாடி கிராமத்தில் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதையொட்டி கீழ்பாடியில் உள்ள கிராம சேவை மைய கட்டடம் புதுப்பிக்கப்பட்டு, நேற்று காலை தயார் நிலையில் இருந்தது.இந்நிலையில் திடீரென திறப்பு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக நேற்று காலை அறிவிக்கப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலை 8:00 மணியளவில் கீழ்பாடி வி.ஏ.ஓ., மற்றும் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவலறிந்த டி.எஸ்.பி., ராஜூ, இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மக்கள் சமாதானம் ஆகாததால் மதியம் 12:00 மணியளவில் தியாகதுருகம் - திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர்.உடன், மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 86 பேரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர். இதனால், 12:30 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE