பெண்ணாடம் : பெண்ணாடத்தில் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டியபோது, திடீரென மின்கம்பம் ஒன்று சாய்ந்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை கடந்தாண்டு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, ரூ. 49 கோடி நிதியில் 10 மாதங்களுக்கு மேலாக விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. விரிவாக்க பணிகள் பல இடங்களில் முடிந்த நிலையில், பெண்ணாடம் கடைவீதி முதல் மேற்கு மெயின்ரோடு வரை கழிவுநீர் செல்ல சாலையோரம் வடிகால் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது.
நேற்று காலை 10:00 மணியளவில் பழைய பஸ் நிலையம் அருகே பொக்லைன் மூலம் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டியபோது, எதிர்பாராத விதமாக இரும்பு மின்கம்பம் ஒன்று திடீரென சாய்ந்தது. இதையறிந்த ஆப்பரேட்டர் மின்கம்பம் சாய்வதை பொக்லைன் உதவியுடன் தடுத்து நிறுத்தினார்.தகவலறிந்து வந்த பெண்ணாடம் நகரம், உதவி பொறியாளர் வெங்கசேடசன் தலைமையிலான மின் ஊழியர்களுக்கும், பள்ளம் தோண்டிய ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர், மின்சாரம் நிறுத்தப்பட்டு, மின்கம்பத்தை சரிசெய்து, கான்கிரீட் அமைத்து சீரமைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE