விருத்தாசலம் : தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி சுற்றுப்பயண இடங்களை, ஸ்டாலினின் நேர்முக உதவியாளர், மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., பார்வையிட்டனர்.
தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி, வரும் 21, 22ம் தேதிகளில், கடலுார் மாவட்டத்தில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 21ம் தேதி, அண்ணாகிராமத்தில் துவங்கி, வேப்பூர் அடுத்த பெரியநெசலுாரில் பயணம் முடிகிறது.சுற்றுப்பயணம் செய்யும் இடங்களில் மக்கள் சந்திப்பு, குறைகள் கேட்குமிடம் ஆகிய பகுதிகளை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேர்முக உதவியாளர் அன்பகம் கலை, மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., ஆகியோர் பார்வையிட் டனர்.விருத்தாசலம் புறவழிச்சாலை, கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய இடங்களை பார்வையிட்ட அவர்கள், அந்தந்த பகுதிகளில் கட்சியினர் வரவேற்பு தருவது குறித்து ஆலோசித்தனர்.
நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் கனககோவிந்தசாமி, வேல்முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, துணை அமைப்பாளர் கணேஷ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள்குமார், நகர இளைஞரணி பொன்கணேஷ், வழக்கறிஞரணி ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்மமணிவேல், துணை அமைப்பாளர் வசந்தகுமார், சிறுபான்மை பிரிவு அன்சர் அலி, ஒன்றிய கவுன்சிலர் செல்வி சிவகண்டன், பொதுக்குழு உறுப்பினர் குருசரஸ்வதி, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கதிரவன், இளைஞரணி மதிவாணன், வழக்கறிஞரணி இளங்கோவன், நிர்வாகிகள் பாஸ்கரன், குமார், பிரபு, கார்த்தி, ஒன்றிய துணை செயலாளர் முத்து, ஊராட்சித் தலைவர்கள் ராஜேந்திரன், இளையராஜா உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE