குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி நுாலகருக்கு அரசு சார்பில் 'நல்நுாலகர்' விருது வழங்கப்பட்டது.சிறப்பான சேவையாற்றும் நுாலகர்களுக்கு அரசு சார்பில் 'நல்நுாலகர்' விருது வழங்கப்படுகிறது.
கடந்த, 2012ம் ஆண்டு முதல், இந்திய நுாலக தந்தையான, டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் பெயரில் விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டிற்கு குறிஞ்சிப்பாடி கிளை நுாலகத்தின் நுாலகர், அருள்ஜோதி உட்பட தமிழகத்தில் 33 நுாலகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சந்திரசேகர சகாமுரியிடம் நுாலகர் அருள்ஜோதி விருதினை பெற்று கொண்டார்.சான்றிதழ், 50 கிராம் வெள்ளிப்பதக்கம், ரூ.5 ஆயிரம் காசோலை ஆகியவை வழங்கப்பட்டது. மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி, முதுநிலை நுாலகர் பாப்பாத்தி, இரண்டாம் நிலை நுாலகர் சந்திரபாபு மற்றும் கடலுார் நுாலக அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE