வாஷிங்டன்:பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரிடம், 750 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தொடரப்பட்ட மனுவை, அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்தாண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், காஷ்மீர், லடாக் என, இரு யூனியன் பிரதேசங்கள், பார்லிமென்ட் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண மாவட்ட நீதிமன்றத்தில், 'காஷ்மீர் காலிஸ்தான் ஓட்டெடுப்பு முன்னணி' என்ற பிரிவினை வாத அமைப்பு, மனு தாக்கல் செய்தது.இதே போல, டி.எப்.கே., மற்றும் எஸ்.எம்.எஸ்., என்ற இரு பெயர்களில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், 'மோடி, அமித் ஷா, ராணுவ அதிகாரி கன்வல் ஜீத் சிங் தில்லான் ஆகியோர், 750 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என, கோரப்பட்டிருந்தது,கடந்த ஆண்டு, ஹூஸ்டன் நகரில் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரின், 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி நடப்பதற்கு சில தினங்களுக்கு முன், இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த மனுக்கள் இருமுறை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இதை சுட்டிக் காட்டி, நீதிபதி ஆண்ட்ரூ ஹேனன், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE