பொது செய்தி

தமிழ்நாடு

தரமான பாலம் கட்ட கோரி

Added : டிச 15, 2020
Share
Advertisement
விருத்தாசலம் : பரவளூர் - ரெட்டிக்குப்பம் இடையே கட்டப்படும் மேம்பாலத்தை தரமாக கட்ட கோரி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த பரவளூர் - ரெட்டிக்குப்பம் இடையே மணிமுக்தாற்றில் ரூ.16 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி, கடந்த ஓராண்டாக நடக்கிறது.இந்நிலையில், பாலம் தரமின்றி கட்டப்படுவதாகவும், பாலத்தின் அருகே கான்கிரீட்

விருத்தாசலம் : பரவளூர் - ரெட்டிக்குப்பம் இடையே கட்டப்படும் மேம்பாலத்தை தரமாக கட்ட கோரி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த பரவளூர் - ரெட்டிக்குப்பம் இடையே மணிமுக்தாற்றில் ரூ.16 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி, கடந்த ஓராண்டாக நடக்கிறது.இந்நிலையில், பாலம் தரமின்றி கட்டப்படுவதாகவும், பாலத்தின் அருகே கான்கிரீட் வடிகால் வாய்கால் அமைக்க கோரியும், பரவளூர் கிராம மக்கள் நேற்று காலை 11:00 மணியளவில் பணி நடைபெறும் இடத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், கான்கிரீட் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படும் என உறுதியளித்தனர். அதையேற்று, காலை 11:30 மணிக்கு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X