சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரகண்டநல்லுார் கமிட்டி முன்

Added : டிச 15, 2020
Share
Advertisement
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி விவசாயிகளுக்கு பாக்கித் தொகையை வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., சார்பில் நேற்று கமிட்டி முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகர செயலாளர் பிரபு வரவேற்றார். மாவட்டச் செயலாளர் புகழேந்தி, துணைச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவி, விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி விவசாயிகளுக்கு பாக்கித் தொகையை வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.மு.க., சார்பில் நேற்று கமிட்டி முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகர செயலாளர் பிரபு வரவேற்றார். மாவட்டச் செயலாளர் புகழேந்தி, துணைச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவி, விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அன்பு உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்திற்கு, பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

பின்னர் அவர் பேசுகையில், 'மார்க்கெட் கமிட்டியை நேற்று திறந்து விட்டதாக கமிட்டி நிர்வாகம் தெரிவிக்கிறது. இருப்பினும் அதற்கான முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அதனால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஒரு வியாபாரி மட்டும் 25 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்திருப்பதாகவும், விவசாயிகளுக்கு 65 லட்சம் ரூபாய் நிலுவை இருப்பதாகவும் அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.வரும் 20ம் தேதிக்குள் விவசாயிகளுக்கான பாக்கித் தொகையை வழங்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X