விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் இளைஞரணி மற்றும் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சேகர் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் கனல்கண்ணன், மாநில அமைப்பு செயலாளர் சின்னதுரை, ஊடகப்பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் குமரவேல், மாநில இளைஞரணி செரோன்குமார் ஆகியோர் பேசினர்.ஊடக பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிற்றரசு, மாநில நிர்வாகிகள் முருகன், தமிழ்செல்வன், பாலசுப்பிரமணியன், கண்ணன், மகளிரனி ஜெயா, இளைஞரனி இளஞ்சூரியன், நீலகண்டன், அருண்குமார், ரவி, செந்தில், வெங்கடாசலம், சுரேந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE