விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக திருப்பணியை, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடத்திட தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகிறது. தொல்லியல் துறையின் அறிவுரைப்படி, பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் நடக்கிறது.இதனை, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். அப்போது, திருப்பணி கமிட்டி குழு தலைவர் அகர் சந்த் மற்றும் சிவாச்சாரியார் களுடன் ஆலோசனை நடத்திய அவர், திருப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பணிகளை துரிதமாக முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, கணக்கர் பார்த்தசாரதி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் பாலசுப்ரமணியன், அ.தி.மு.க., நிர்வாகிகள் முருகன், வெங்கடேசன், செல்வகணபதி, சதீஷ்குமார், முத்து உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE