கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் குத்தகைக்கு விடுவதற்கு எதிராக வழக்கு

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு, கோவில் நிலத்தை குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவிற்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கும், அறநிலைய துறைக்கும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கலெக்டர் அலுவலகம் கட்ட,

சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு, கோவில் நிலத்தை குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவிற்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கும், அறநிலைய துறைக்கும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கலெக்டர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரம் என்ற இடத்தில், அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 45 ஏக்கர் நிலத்தை, அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், கோவில் நிலத்தை, நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக, நவ., 28ல், அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல், குத்தகைக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், எத்தனை ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படுகிறது என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அறநிலைய துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நிலம் குத்தகைக்கு வழங்கப்படும் போது, சட்ட நடைமுறை முழுமையாக பின்பற்றப்படும். 'பயன்பாட்டில் இல்லாத நிலத்தின் வாயிலாக, மாத வாடகையாக கோவிலுக்கு வருவாய் கிடைக்கும்; மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்' என்றார்.

இதையடுத்து, 'நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களை பார்க்கும் போது, கோவில் சிதிலம் அடைந்துள்ளது தெரிகிறது; அதை சரிசெய்யாதது ஏன்; எத்தனை ஆண்டுகள் நிலம் குத்தகைக்கு வழங்கப்படுகிறது என, குறிப்பிடாததது ஏன்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இம்மனுவுக்கு, தமிழக அரசும், அறநிலையதுறையும் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 22க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்க உத்தர விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X