பல்கலை துணைவேந்தருக்கு எதிரான மனு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பல்கலை துணைவேந்தருக்கு எதிரான மனு தள்ளுபடி

Added : டிச 15, 2020 | கருத்துகள் (1)
Share
சென்னை:அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவியில், சுரப்பா நீடிப்பதை எதிர்த்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு:பல்கலை மானிய குழு விதிகளின்படி, ஒருவர் இரு முறைக்கு மேல் துணைவேந்தராக நியமிக்க முடியாது. சுரப்பா, 2009 முதல், 2015 வரை ஆறு ஆண்டுகள், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஐ.ஐ.டி.,யில் இயக்குனராக பதவி

சென்னை:அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவியில், சுரப்பா நீடிப்பதை எதிர்த்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு:பல்கலை மானிய குழு விதிகளின்படி, ஒருவர் இரு முறைக்கு மேல் துணைவேந்தராக நியமிக்க முடியாது. சுரப்பா, 2009 முதல், 2015 வரை ஆறு ஆண்டுகள், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஐ.ஐ.டி.,யில் இயக்குனராக பதவி வகித்தார். 2016 - -17ல், இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில், டீன் பதவியும் வகித்துள்ளார்.

ஐ.ஐ.டி., இயக்குனர் பதவி என்பது, துணைவேந்தர் பதவிக்கு இணையானது.அதன் அடிப்படையில் ஏற்கனவே, இரு முறை பதவி வகித்துள்ளதால், அண்ணா பல்கலை துணை வேந்தராக, இவரை நியமித்தது, யு.ஜி.சி., விதிகளுக்கு எதிரானது. இதுகுறித்து, அரசுக்கு நான் அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன்,ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.'ஐ.ஐ.டி., இயக்குனர் மற்றும் இந்திய அறிவியல் கழக நிறுவன டீன் பதவிகள், துணைவேந்தர் பதவிகளுக்கு இணையானது என்பதற்கான, எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X