பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலை இன்ஜி., தரவரிசை மாணவியர் முதலிடம் பிடித்து சாதனை

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை:அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களின் தரவரிசை பட்டியல், வெளியிடப்பட்டது. இதில், மாணவியர் அதிக அளவில், முதலிடம் பெற்றுள்ளனர்.அண்ணா பல்கலை இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், அண்ணா பல்கலை தயாரித்துள்ள பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு
 அண்ணா பல்கலை இன்ஜி., தரவரிசை மாணவியர் முதலிடம் பிடித்து சாதனை

சென்னை:அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களின் தரவரிசை பட்டியல், வெளியிடப்பட்டது. இதில், மாணவியர் அதிக அளவில், முதலிடம் பெற்றுள்ளனர்.

அண்ணா பல்கலை இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், அண்ணா பல்கலை தயாரித்துள்ள பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறையால், நேரடியாக தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.


ஆன்லைனில் தேர்வுகள்

இந்நிலையில், 2019 - 20ம் கல்வி ஆண்டின் இறுதி பருவமான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுகள், கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டன. பின், செப்டம்பரில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டன. கலை, அறிவியல் கல்லுாரிகளை போல அல்லாமல், தேர்வு நேரம் முழுதும் ஆன்லைன் கண்காணிப்புடன், கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது.

பி.இ., - பி.டெக்., படிப்புகளில், 'டாப்' கல்லுாரிகள் என்று பேசப்படும் கல்லுாரிகள் மட்டுமின்றி, நடுத்தர கல்லுாரிகளின் மாணவ - மாணவியரும் அதிக மதிப்பெண் பெற்று, தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளனர்.இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், மாணவ - மாணவியர் போட்டி போட்டு தேர்வு செய்யும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், ஸ்ரீசாய்ராம் இன்ஜி., கல்லுாரி மாணவி முதலிடம் பெற்று உள்ளார். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பிரிவுகளில், ஆர்.எம்.டி., கல்லுாரி; இன்பர்மேஷன் டெக்னாலஜியில், ஆர்.எம்.கே., இன்ஜி., கல்லுாரி முதலிடம் பெற்றுள்ளன.


மாணவியர் சாதனை

இன்ஸ்ட்ரூமென்டேஷன்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில், செயின்ட் ஜோசப் கல்லுாரி; வேளாண் இன்ஜி., பிரிவில், கோவை ஆர்.வி.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி; பயோமெடிக்கல் பிரிவில், ராஜலட்சுமி கல்லுாரி; பயோடெக்னாலஜியில் அருணை இன்ஜி., கல்லுாரி முதலிடம் பெற்றுள்ளது.சிவில் மற்றும் மெக்கானிக்கல் தமிழ் வழி மற்றும் பார்மசூட்டிகல் பிரிவுகளில், திருச்சி அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி மாணவ - மாணவியர் முதலிடம் பிடித்துள்ளனர். பி.ஆர்க்.,கில், மியாஸி அகாடமி மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.இந்த முறை செமஸ்டர் தேர்வுகளில், தங்க பதக்கம் பெறுவதற்கான முதலிட பட்டியலில், பெரும்பாலும் மாணவியரே இடம் பிடித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X