சிதம்பரம் : அ.ம.மு.க., விற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதையடுத்து சிதம்பரத்தில் அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
வரும் சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க., விற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிதம்பரம் தெற்கு வீதியில் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக பஸ் நிலையத்தில் இருந்து சபாநாயகம் தெரு வரை குக்கரை கையில் ஏந்தி ஊர்வலம் சென்றனர். நிகழ்வில் நகர செயலாளர் மணிவண்ணன், நிர்வாகிகள் திருஞானசம்மந்தம், மணிவேல், மோகன், நாராயணமூர்த்தி, பாலதண்டாயுதம், கணேசன், சுப்ரமணியசாமி, முத்தையன், மூர்த்தி, ஷாஜகான், அருண்குமார், பிலால் அகமது உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE