சம்பவம் செய்தி

தமிழ்நாடு

96 ஆண்டுகள் பழமையான பள்ளிக் கட்டடம் இடிப்பு

Added : டிச 15, 2020
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 96 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடித்து அகற்றும் பணி துவங்கியது. திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட இப்பள்ளியில் படித்த பலரும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., நீதிபதிகள், டாக்டர்கள் என உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.பல

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 96 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடித்து அகற்றும் பணி துவங்கியது.

திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட இப்பள்ளியில் படித்த பலரும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., நீதிபதிகள், டாக்டர்கள் என உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.பல அறிஞர்களை உருவாக்கிய இப்பள்ளி கடந்த 1924ம் ஆண்டு கட்டப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இக்கட்டடம் பழுதாகி இடிந்து விழும் நிலையில் இருந்தது.இதன் காரணமாக கட்டடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை இடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி 96 ஆண்டுகள் பழமையான பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்றுவதற்கான பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X