ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீர் நிரம்பிய நிலையில் சேதுபதி ஊரணி கண்களை கவர்கிறது.
சேதுபதி நகர் 5வது தெரு அருகில் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்துஉள்ளது சேதுபதி ஊரணி. ஓராண்டிற்கு முன்பு வரை முட்புதர் மண்டி, சீமைக்கருவேல மரங்களுக்குள் குப்பை மேடாக இந்த ஊரணி இப்போது சுற்றுலா பகுதி போல எழிலுடன் காட்சியளிக்கிறது.இந்த ஊரணி பகுதியில் அடர்ந்திருந்த 100க்கும் மேற்பட்ட சீமைக்கருவேல மரங்களை தனி நபராக சமூக ஆர்வலரான போலீஸ் பயிற்சி நிலைய ஏட்டு சீனிவாசன் அகற்றி துாய்மைப்படுத்தினார்.
அதன்பின் ராமநாதபுரம் டாக்டர் பரணிக்குமார் அளித்த ரூ.1.10 லட்சத்தில் ஊரணியை சுற்றிலும் ஆள் உயரத்திற்கு கம்பி வேலி அமைத்தார். பின், ஊரணியை சுற்றிலும் மா, பலா, கொய்யா போன்ற பழ மரங்கன்றுகளையும், ஆல மரம், அரச மரம், வேம்பு உள்ளிட்ட 300 மரக்கன்றுகளை நட்டுஉள்ளார். சுற்றிலும் 400 பனை விதைகளையும் நட்டுள்ளார்.இவரது முயற்சியால் ஓராண்டிற்கு முன்பு வரை மது அருந்துவோர் உள்ளிட்ட சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்த ஊரணி பகுதி பாதுகாக்கப்பட்டு தற்போது அனைவரின் கண்களை கவர்கிறது. யாராவது தவறி விழுந்தால் அவர்களை மீட்பதற்காக ஒரு மிதவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE