பொது செய்தி

தமிழ்நாடு

ஜெகத்ரட்சகன் எம்.பி.,யின் மனைவி மரணம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை:உடல்நல குறைவால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனின் மனைவி, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா, 63. இவருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைநடந்தது. நவ., 24ம் தேதி, கல்லீரல் பிரச்னையால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை

சென்னை:உடல்நல குறைவால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனின் மனைவி, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா, 63. இவருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைநடந்தது. நவ., 24ம் தேதி, கல்லீரல் பிரச்னையால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவரது உடல் ஆம்புலன்சில், குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, 10 நிமிடம் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின், அடையாறு, கஸ்துாரிபாய் நகரில் உள்ள, அவரது வீட்டில் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்தது. மாலையில், பெசன்ட்நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, அனுசூயா உடலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். ஜெகத்ரட்சகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X