சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

தரமான பொருளுக்கு மவுசு தான்!

Added : டிச 15, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பின்புலம், முன் அனுபவம் எதுவுமின்றி, குறைந்த முதலீட்டில், வீட்டிலேயே இயற்கை சோப் தயாரித்து, இரண்டே ஆண்டுகளில் வெற்றியை வசப்படுத்தியுள்ளது பற்றி, திருச்சியைச் சேர்ந்த இந்துமதி: என்னுடையது நடுத்தர குடும்பம் தான் என்ற போதிலும், வேலைக்கு போய் தான் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. எனினும், எனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும், என்

சொல்கிறார்கள்

பின்புலம், முன் அனுபவம் எதுவுமின்றி, குறைந்த முதலீட்டில், வீட்டிலேயே இயற்கை சோப் தயாரித்து, இரண்டே ஆண்டுகளில் வெற்றியை வசப்படுத்தியுள்ளது பற்றி, திருச்சியைச் சேர்ந்த இந்துமதி: என்னுடையது நடுத்தர குடும்பம் தான் என்ற போதிலும், வேலைக்கு போய் தான் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. எனினும், எனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும், என் மனதில் இருந்து கொண்டே இருந்தது.பிளஸ் ௨ படிக்கும் போதே கல்யாணம் ஆகிவிட்டது. கணவர், 'லேத் ஆப்பரேட்டர்' ஆக உள்ளார். ஓய்வு நிறைய இருந்ததால், சுயமாக ஏதாவது ஒரு தொழில் செய்யலாமே என நினைத்துக் கொண்டே இருந்தேன். அப்போது, சமூக வலைதளமான, 'யுடியூபில்' மூலிகை சோப் தயாரிப்பது குறித்து படித்தேன்.

அதை செய்து பார்க்கலாமே என எண்ணி, ரசாயன பொருட்கள் ஏதும் கலக்காமல், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி, மூலிகை சோப் தயாரித்தேன். அந்த சோப்பில் ஜாதிக்காய், மாசிக்காய், கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, வெட்டி வேர், வசம்பு, கஸ்துாரி மஞ்சள் என, ௨௦ மூலிகைகளை சேர்த்து, பலருக்கும் இலவசமாக கொடுத்தேன். அதை வாங்கி பயன்படுத்தியவர்கள், நன்றாக இருப்பதாக கூறியதை அடுத்து, சென்னையில் உள்ள ஆய்வகத்தில் அந்த மூலிகை சோப்பை கொடுத்து, தரத்தை உறுதி செய்து, சான்றிதழ் வாங்கிக் கொண்டேன்.அதன் பின், சோப் தயாரிக்கத் துவங்கினேன். இப்போது, மாதம், 7,௦௦௦ சோப் தயாரிக்கிறேன். ஆரம்பத்தில் என்னை நம்பி யாரும் சோப் வாங்கலை. புதிதாக தொழில் துவங்கும் பலருக்கும் இது தான் சவால்.
அதை கடந்து விட்டால், தொழில் நிலைபெற்று விடும் என்பதை அறிந்து, கடினமாக உழைத்தேன்.
கடை கடையாக ஏறி, இறங்கினேன். சாம்பிள் சோப் வாங்கியவர்கள், பின், அதிக எண்ணிக்கையில் சோப் வாங்கத் துவங்கினர். அது எனக்கு நம்பிக்கையை தந்தது. எட்டு மாதங்கள் கடும் உழைப்புக்கு பின், 'வழலை' என்ற என் இயற்கை மூலிகை சோப்புக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
இப்போது முழு அளவில் சோப் தயாரித்து விற்பனை செய்கிறேன். நான் அலைந்து திரிந்து விற்ற நிலை மாறியுள்ளது. என்னை தேடி வந்து சோப் மற்றும் பிற பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இணையதளத்தை துவக்கியுள்ளதால், பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும், 'ஆர்டர்'கள் வருகின்றன.தவிர, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், கிராம்பு, வால் மிளகு, ஏலக்காய், இந்துப்பு, ஆலம் பட்டை, வேப்பம் பட்டை, கருவேலம்பட்டை உட்பட பல மூலிகைகளை சேர்த்து, மூலிகை பல்பொடி, தலையில் தேய்க்கும் எண்ணெய் போன்றவற்றையும் தயாரிக்கிறேன்.
தரமான பொருளை கொடுத்தால், நியாயமான வரவேற்பு இருக்கும் என்பதை அறிந்து கொண்டுள்ளேன்; அதனால், தரமான முறையில் பொருட்களை தயாரிக்கிறேன்!

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
16-டிச-202009:59:12 IST Report Abuse
RADE வாசகர்கள் தொடர்பு கொள்ள எண் அல்லது இணையதள முகவரி தராமல் போனது தான் சிறு ஏமாற்றம்.
Rate this:
Cancel
senthil kumar kasinathan - mannargudi,ஐக்கிய அரபு நாடுகள்
16-டிச-202007:20:47 IST Report Abuse
senthil kumar kasinathan வாழ்த்துக்கள் சகோதரி மேன்மேலும் சாதிக்க இறைவன் அருள் கிடைக்கட்டும்
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
16-டிச-202006:15:00 IST Report Abuse
NicoleThomson வாழ்த்துக்கள் பெண்ணே , உங்கள் வெப்சைட்டில் விக்னேஷ் என்பவற்றின் கருத்துக்களை படித்தீர்களா? ஒருவகையில் உங்களை பாராட்டுகிறேன் அவரின் பணத்தை திருப்பி கொடுத்துள்ளீர்கள் ,அவரின் கருத்துக்களையும் மதித்து போட்டுள்ளீர்கள் , என்ன ஆனது என்பதை விளக்க முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X