ரிஷிவந்தியம் : மேலப்பழங்கூர் ஆண்டி குட்டையை தனி நபர் ஆக்கிரமித்து மீன் வளர்ப்பதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரிஷிவந்தியம் அடுத்த மேலப்பழங்கூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஆண்டி குட்டை உள்ளது. மேலப்பழங்கூர் வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஆண்டி குட்டையில் தேங்குவதன் மூலம், கிராமத்தின் தண்ணீர் தேவை பூர்த்தியடையும்.குறிப்பாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாய நிலங்கள் பயன்பெறும். ஆனால், ஆண்டி குட்டையை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் வருவாய்த் துறையினர் ஆண்டி குட்டையை அளவீடு செய்து, அதன் எல்லைப் பகுதியில் கல் நட்டனர். தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் குட்டை துார்வாரப்பட்டது.
இந்நிலையில், அதே நபர் மீண்டும் ஆண்டிகுட்டையை ஆக்கிரமித்து பயிர் செய்வதுடன், நுழைவு வாயிலில் கதவு அமைத்துள்ளார்.குறிப்பாக ஆண்டுதோறும் மீன் வளர்ப்புக்காக இக்குட்டை ஏலம் விடப்பட்டு, பெறப்படும் தொகை ஊராட்சி கணக்கில் செலுத்தப்படுவது வழக்கம். தற்போது, ஆக்கிரமிப்பு செய்த நபர், ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் குட்டையில் மீன்களை விட்டு வளர்த்து வருகிறார்.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மேலப்பழங்கூர் ஆண்டிகுட்டை ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினர் அகற்றுவதுடன், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE