பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் விவசாயப்பணி மாநில ஆலோசகர் ஆய்வு

Added : டிச 15, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் வேளாண்துறையின் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் விவசாயப்பணிகளை சென்னை பல்துறை செயலாக்க வேளாண் மாநில ஆலேசாகர் ஷாஜகான் ஆய்வு செய்தார். தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் நொச்சிவயல், களத்தாவூர், புத்தேந்தல், காருகுடி, பெருவயல் பகுதிகளில் 55 எக்டேரில் பசுந்தாழ் உரம், நெல், பயறு 18

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் வேளாண்துறையின் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் விவசாயப்பணிகளை சென்னை பல்துறை செயலாக்க வேளாண் மாநில ஆலேசாகர் ஷாஜகான் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் நொச்சிவயல், களத்தாவூர், புத்தேந்தல், காருகுடி, பெருவயல் பகுதிகளில் 55 எக்டேரில் பசுந்தாழ் உரம், நெல், பயறு 18 எக்டேரில் கேழ்வரகு, 13 எக்டேரில் குதிரைவாலி, 15 எக்டேரில் உளுந்து, 4 எக்டேரில் நிலக்கடலை ரூ.7.87 லட்சம் மானியத்தில் மேம்படுத்தப்பட்ட பயிர் உற்பத்தி தொழில்நுட்ப செயல்விளக்க திடல் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றை சென்னை பல்துறை செயலாக்க வேளாண் மாநில ஆலோசகர் ஷாஜகான் ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சேக் அப்துல்லா, உதவிஇயக்குனர் கோபாலகிருஷ்ணன், அலுவலர் ஷாலினா உடனிருந்தனர்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X