தமிழ்நாடு

கோரிக்கை! மேம்பாலம் கட்டித்தர கூடலூர் கிராம மக்கள்...அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீது அதிருப்தி

Added : டிச 15, 2020
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ஆற்றைக் கடந்து செல்லும் கிராம மக்கள், மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிகரிக்கும்போது, கிராமங்களை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கும் அவலம் நீடித்து வருகிறது. இதனால், குரும்பலுார் வழியாகச் செல்லும் மணி நதியில், மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சங்கராபுரம், மோட்டாம்பட்டி அடுத்த

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ஆற்றைக் கடந்து செல்லும் கிராம மக்கள், மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிகரிக்கும்போது, கிராமங்களை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கும் அவலம் நீடித்து வருகிறது.

இதனால், குரும்பலுார் வழியாகச் செல்லும் மணி நதியில், மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சங்கராபுரம், மோட்டாம்பட்டி அடுத்த கூடலுார் என்ற மலை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட கடைகள் கிடையாது. இதுவரை இக்கிராமத்தில் பஸ் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.இக்கிராம மக்கள் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், 3 கி.மீ., துாரம் உள்ள மோட்டாம்பட்டிக்கு வரவேண்டும்.

அப்படி வரவேண்டும் என்றால் நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்திலோ வழியில் உள்ள குரும்பலுார் ஆற்றைக் கடந்து வரவேண்டும்.கோடை காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்லாதபோது ஆற்றை எளிதாக கடந்து சென்று வருவர். ஆனால், மழைக் காலங்களில் கல்வராயன்மலையில் பெய்யும் மழை நீர் மணி நதியில் பெருக்கெடுத்து, குரும்பலுார் வழியாக செல்கிறது.அவ்வாறு மணி நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது, கூடலுாரில் இருந்து மோட்டாம்பட்டிக்குச் செல்லும் பள்ளி மாணவர்கள், முதியோர்கள் என அனைவரும் இடுப்பளவு தண்ணீரில் நடந்து ஆற்றைக் கடக்கின்றனர்

.உடல் நிலை சரியில்லாதவர்கள், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட ஆற்று நீரில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.சில நேரங்களில் ஆற்றைக் கடக்கும் போது வெள்ளத்தில் பள்ளி மாணவர்கள் மூழ்கி, நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி அதிகளவில் நதியில் ஓடும் தண்ணீர், குறையும் வரை இரண்டு, மூன்று நாட்களானாலும் கூடலுார் கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

மோட்டாம்பட்டி - கூடலுார் ஆற்றில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும், மனு அனுப்பியும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இதுகுறித்து கண்டுகொள்வதில்லை. இதுவரை, தரைப்பாலம் கூட அமைத்து தராததால் கிராம மக்கள் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, கூடலுார் கிராம மக்கள் சிரமமின்றி ஆற்றைக் கடந்து சென்று வர, மேம்பாலம் கட்டித்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X