சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் துறையில் கட்டு கட்டாக பணம் : என்ன நடக்குது இங்கே?

Updated : டிச 17, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடி வரும் நிலையில், சுற்றுச்சூழல் அதிகாரியின் வீடு மற்றும் அலுவலகத்தில், நேற்று நடந்த சோதனையில், கட்டு கட்டாக பணம், வைரம், தங்கம் என, எக்கச்சக்கமான நகைகளும், 10 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களும் சிக்கியுள்ளன. இதனால், 'என்ன நடக்குது இங்கே?' என்று, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து, கேள்வி எழுப்பும் நிலை
 சுற்றுச்சூழல் துறை,கட்டு கட்டாக பணம்,

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடி வரும் நிலையில், சுற்றுச்சூழல் அதிகாரியின் வீடு மற்றும் அலுவலகத்தில், நேற்று நடந்த சோதனையில், கட்டு கட்டாக பணம், வைரம், தங்கம் என, எக்கச்சக்கமான நகைகளும், 10 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களும் சிக்கியுள்ளன. இதனால், 'என்ன நடக்குது இங்கே?' என்று, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து, கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடரும் லஞ்ச லாவண்யத்தை கட்டுப்படுத்த, முதல்வர் இ.பி.எஸ்., அவசர கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், அக்டோபரில், வேலுார் மாவட்டம், காட்பாடியில் உள்ள, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.அங்கு, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வரும், பன்னீர் செல்வம், 51, என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்தில், 19 மணி நேரம் சோதனை நடந்தது.அதில், 3.25 கோடி ரூபாய் ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள்; 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 90 சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சேலம்


சேலத்தில், பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., ஆனந்த் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி, 3.20 லட்சம் ரூபாய் ரொக்கம், 34 சவரன் தங்க நாணயங்களை கைப்பற்றினர். சென்னை, அண்ணா நகரில், ஆனந்திற்கு சொந்தமான, 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கில் இருந்த, 1 கோடி ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களை முடக்கினர்.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், 17 இடங்களில், ஆர்.டி.ஓ., சோதனை சாவடிகளில் நுழைந்து, லஞ்சப்பணம், 9 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

விருதுநகரில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள், கலைச்செல்வி, சண்முக ஆனந்த், இடைத்தரகர் அருள் பிரசாத் ஆகியோரின் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்த, 25.66 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். கலைச்செல்வியிடம், 117 சவரன் தங்க நகையும் சிக்கியது.நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையத்தில், கலைச்செல்வியின் வாடகை வீட்டில், நேற்று முன்தினம் சோதனை நடத்தி, 6.46 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனால், கலைச்செல்வி மற்றும் சண்முக ஆனந்த், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
பனகல் மாளிகைஇந்நிலையில், சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை, சுற்றுச்சூழல் இயக்குனரகத்தை ஆட்டிப்படைத்து வந்த, கண்காணிப்பாளர் பாண்டியன், 58, அலுவலகத்தில், நேற்று முன்தினம் சோதனை நடத்தி, 88 ஆயிரத்து, 500 ரூபாயை ரொக்கமாக கைப்பற்றினர்.பின், சென்னை, சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள, பாண்டியனின் சொகுசு வீட்டில், விடிய விடிய, 20 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்தது.அப்போது, கட்டு கட்டாக பதுக்கி இருந்த, 1.37 கோடி ரூபாய்; வங்கி கணக்கில், 38 லட்சத்து, 66 ஆயிரத்து, 220 ரூபாய்; 3 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 1.22 கோடி ரூபாய். அதேபோல, 5.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10.52 கேரட் வைர நகைகள், 3.343 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கியில் நிரந்த வைப்பு தொகை, 37 லட்சம் ரூபாயையும் கைப்பற்றினர். மேலும், பாண்டியன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான, 7 கோடி ரூபாய் மதிப்பிலான, 18 சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

அத்துடன், காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் தனமூர்த்தி அலுவலகத்தில், நேற்று முன்தினம், சோதனை நடத்தி, 1.75 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று செங்கல்பட்டில் உள்ள, அவரது வீட்டில், 11.55 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். இப்படி, லஞ்ச பறிமுதல் கணக்குகளை கேட்டாலே தலை சுற்றுகிறது. சார் - பதிவாளர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், சுற்றுச் சூழல்துறை, கலால் என, அரசின் பல்வேறு துறைகளில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடி வருவதையே, இத்தகைய நிகழ்வுகள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. இந்த லஞ்ச லாவண்யத்திற்கும், துறையின் முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் இ.பி.எஸ்., தனிக்கவனம் செலுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


யார் இந்த பாண்டியன்?புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த பாண்டியன், 'குரூப் - 1' அதிகாரி. மேலிடத்து செல்வாக்கு காரணமாக, பனகல் மாளிகையில் மட்டும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர், விரல் அசைத்தால் மட்டுமே கோப்புகள் நகரும். தற்போது சுற்றுச் சூழல் துறை கண்காணிப்பாளராக உள்ளார்.கோட்டையில் கோலோச்சிய முன்னாள் தலைமை செயலர் ஒருவர், பாண்டியன் சொல்படி தலையாட்டும் நிலையில் இருந்தார். தற்போதும், கோட்டை வட்டாரத்தில் பாண்டியனுக்கு தனி செல்வாக்கு உண்டு. அதனால், பாண்டியன் மீது எந்த புகார் சென்றாலும், குப்பை கூடைக்கு சென்று விடும்.

ரியல் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலை அதிபர்களுக்கு பாண்டியன் செல்லப்பிள்ளை. தடையின்மை சான்று பெற, இவருக்கு பல கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்துள்ளனர். தான் சொல்வதை கேட்காத, ஐ.எப்.எஸ்., திகாரிகளை பணியிட மாற்றம் செய்து விடுவேன் என, மிரட்டுவார். சுற்றுச்சூழல் இயக்குனரகத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரியின் மனைவி ஒருவர், ஐ.எப்.எஸ்., அதிகாரியாக பணியாற்றினார்.இவருக்கு பாண்டியன் கொடுத்த டார்ச்சரால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். பாண்டியன் தன் நட்பு வட்டத்தில் உள்ள, ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை அந்தமானுக்கு உல்லாச சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுஉள்ளார்.


அதிகாரிகளுக்கு கோடம்பாக்கத்து பதுமைகளையும் விருந்தாக படைத்துள்ளார். இதில் விடுபட்டுப்போன ஐ.எப்.எஸ்., அதிகாரி ஒருவர் தான், பாண்டியனின் லஞ்ச குவிப்பு விவகாரத்தை போலீசாரிடம் 'போட்டு'க் கொடுத்துள்ளார்.அத்துடன், தி.மு.க., - எம்.பி., ஒருவருடன், பாண்டியனுக்கு நெருக்கமான பழக்கம் உள்ளது. இவருக்கு சாதகமாக பல விஷயங்களை செய்து கொடுத்துள்ளார்.அதற்கு கைமாறாக, அந்த எம்.பி., சென்னை, தி.நகரில் உள்ள, தன் ஓட்டலில், பாண்டியன் மகளுக்கு நடந்த திருமணம் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு வாடகை வாங்காமல், சலுகை காட்டியது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
16-டிச-202022:27:13 IST Report Abuse
m.viswanathan இந்த நாயை புறங்கையை கட்டி , சாலையில் இழுக்கவேண்டும்
Rate this:
Cancel
16-டிச-202017:24:49 IST Report Abuse
ராஜா 🇮🇳ராஜா🇮🇳 அரசாங்கத்தில் பணி புரிபவர்களின் சொத்து மதிப்பை வருடா வருடம் தாக்கல் செய்ய வேண்டும்.புதிய நிலம் நகையோ காரோ வாங்கினால் அந்த துறையில் பதிவு செய்ய வேண்டும்.அப்போது தான் யார் என்ன செய்கிறார்கள் என்று தெரியும்.அப்போ லஞ்சம் குறையும்.
Rate this:
Cancel
Svs Yaadum oore - chennai,இந்தியா
16-டிச-202015:32:23 IST Report Abuse
Svs Yaadum oore இப்படி பட்ட ஒரு அயோக்கியன் இந்த பதவியில் இத்தனை நாள் எப்படி நீடித்தான் என்பது புரியாத விஷயம் ...அரசியல் என்றாலே தமிழ் நாட்டில் கயமை ....இவனால் எண்ணுரில் 15000 ஏக்கர் சதுப்பு நிலங்கள் மாயமாம் .....கடலோர மண்டலம் அனைத்தும் கபளீகரம் .....இவனை கண்டு முன்னாள் தலைமை செயலரே அச்சம் ...
Rate this:
A P - chennai,இந்தியா
16-டிச-202016:25:05 IST Report Abuse
A Pஇது போன்ற லஞ்சப்பேய்கள்தான் கார் பயணம் செல்லும்போது குடும்பத்துடன் மேல் லோகம் போகிறார்கள். புத்தி கெட்டவர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X