ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில்9 மாதமாக முடங்கி கிடக்கும் தீர்த்த கிணறுகளை திறக்க கோரி முதல்வர், துணைமுதல்வரிடம் யாத்திரை பணியாளர்கள் மனு கொடுத்தனர்.
ஊரடங்கினால் மார்ச் 24 முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 22 புனித தீர்த்த கிணறுகளை மூடினர். பின் செப்.,1ல் கோயில் திறந்த பின் பக்தர்கள் புனித நீராட தடை நீடித்தது. இதனால் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததால் இன்று வரை ராமேஸ்வரத்தில் நுாறுக்கு மேலான லாட்ஜ்கள், ஓட்டல்கள், கடைகள் மூடி கிடக்கிறது.மேலும் பக்தருக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்கள், கோயில் ரதவீதியில் உள்ள சிறுவியாபாரிகள் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து, கடனில் சிக்கி தவிக்கின்றனர்.
நேற்று முதல் குற்றாலம்அருவியில் குளிக்க அனுமதி வழங்கியது போல், அரசு வழிகாட்டுதலுடன் ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களை திறந்து, பலதரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க கோரி நேற்று சென்னையில் முதல்வர், துணை முதல்வர், அறநிலைதுறை அமைச்சரிடம் யாத்திரை பணியாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு கொடுத்தனர்.இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என முதல்வர் உறுதியளித்ததாக யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE