சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'யு டியூப்'பில் புதுப்படம் லொள்ளு சபா ஜீவா புகார்

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை:'தன் நடிப்பில் வெளிவந்துள்ள, கொம்பு படத்தை, சமூகவலைதளமான, யு டியூப்பில் வெளியிட்ட, சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நடிகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.சென்னையை சேர்ந்த நடிகர் லொள்ளு சபா ஜீவா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார்:ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர், 4 கோடி ரூபாய் முதலீட்டில், ஸ்ரீசாய் சீனிவாசா

சென்னை:'தன் நடிப்பில் வெளிவந்துள்ள, கொம்பு படத்தை, சமூகவலைதளமான, யு டியூப்பில் வெளியிட்ட, சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நடிகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த நடிகர் லொள்ளு சபா ஜீவா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார்:ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர், 4 கோடி ரூபாய் முதலீட்டில், ஸ்ரீசாய் சீனிவாசா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், கொம்பு என்ற, படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில், கதாநாயகனாக நடித்துள்ளேன். கொம்பு படம், டிசம்பர், 11ல் வெளியானது.

இப்படத்தை சமூக விரோதிகள் சிலர், சமூகவலைதளமான, யு டியூப்பில் வெளியிட்டுள்ளனர். இதனால், 5 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமூக விரோதிகள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யு டியூப்பில், கொம்பு படம் வெளியிட்டு இருப்பதை தடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X