சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உரிமம் இல்லாத சித்த, ஆயுர்வேதமருந்துகளால் மக்களுக்கு ஆபத்து

Added : டிச 15, 2020
Share
Advertisement
ராமநாதபுரம : ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிமம் இல்லாத சித்த,ஆயுர்வேத மருந்துகளை வாங்ககூடாது, போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், என சித்தாபிரிவு கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பாலமுருகன் எச்சரித்துள்ளார். சித்த ஆயுர்வேத மருந்துகளில் போலி மருந்துகளை மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ கண்காணிப்பு துறை தீவிரமாக கண்காணிக்கிறது.

ராமநாதபுரம : ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிமம் இல்லாத சித்த,ஆயுர்வேத மருந்துகளை வாங்ககூடாது, போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், என சித்தாபிரிவு கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பாலமுருகன் எச்சரித்துள்ளார்.

சித்த ஆயுர்வேத மருந்துகளில் போலி மருந்துகளை மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ கண்காணிப்பு துறை தீவிரமாக கண்காணிக்கிறது. தமிழகத்தில் 14 இடங்களில் சித்தமருத்துவ பிரிவில் ஆயுஷ் கண்காணிப்பு அலுவலர்கள் பணிபுரிகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவபிரிவில் மத்திய அரசின் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியாபதி மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புமையம் செயல்படுகிறது. கண்காணிப்பு அலுவலராக டாக்டர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளராக டாக்டர் பேபிப்பிரியா பணிபுரிகின்றனர்.

டாக்டர் பாலமுருகன்கூறுகையில், நோய்எதிர்ப்பு சக்தி, தற்காப்பிற்காக சித்த மருத்துவ மனைகளில் கபசுரகுடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது. சில சித்த, ஆயுர்வேத சில்லரை விற்பனை நிலையங்களில் உரிமம்பெறாமல் தயாரித்தபோலி மருத்துகளை விற்பனை செய்கின்றனர். சிலர் முறையான பட்டம் பெறாமல் சித்த மருத்துவர்கள் எனக்கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அம் மாதிரியான நபர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக www.ayushuraksha.com என்ற இணையதளத்தில் பதிவுபெற்ற சித்த, ஆயுர்வேத டாக்டர்களின் விபரத்தை தெரிந்துகொள்ளலாம். போலி மருத்துவர்கள், போலி மருந்து விற்பனை குறித்தும், மருந்துகளை உட்கொண்டு உடல் உபாதைகள் ஏற்பட்டால் 99943 50429 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X