முதுகுளத்துார் : முதுகுளத்துார், பேரையூரில் டி.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் கட்டி முடித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.
முதுகுளத்துார் டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் கீழத்துாவல், பேரையூர், முதுகுளத்துார், இளஞ்செம்பூர், தேரிருவேலி, கடலாடி, கீழச்செல்வனுார் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது.இங்கு டி.எஸ்.பி.,அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாததால் 9 வருடங்களாகவே வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. 2018 டிசம்பரில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.75.61 லட்சத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் மற்றும் வீடு கட்டுவதற்கு பணி நடந்து முடிந்து திறக்கப்படாமல் உள்ளது.மேலும் பேரையூர் போலீஸ் ஸ்டேஷன் ரூ.60 லட்சத்தில் கட்டும் பணி நடந்து முடிந்தது. இந்த இரு கட்டடங்களும் பணி நிறைவு பெற்றும் திறக்கப்படாமல் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE