சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிவி' நடிகை சித்ரா கணவர் கைது மாமியார், மாமனாரிடம் விசாரணை

Added : டிச 15, 2020
Share
Advertisement
'டிவி' நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்; அவரது மாமியார், மாமனாரிடம், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., நேற்று விசாரணை நடத்தினார்.சென்னையைச் சேர்ந்த, 'டிவி' சீரியல் நடிகை சித்ரா, 29. இம்மாதம், 9ம் தேதி, பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், துாக்கிட்டு தற்கொலை செய்தார். உடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேம்நாத்திடம்,

'டிவி' நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்; அவரது மாமியார், மாமனாரிடம், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., நேற்று விசாரணை நடத்தினார்.

சென்னையைச் சேர்ந்த, 'டிவி' சீரியல் நடிகை சித்ரா, 29. இம்மாதம், 9ம் தேதி, பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், துாக்கிட்டு தற்கொலை செய்தார். உடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேம்நாத்திடம், ஆறு நாட்களாக நசரத்பேட்டை போலீசார் விசாரித்து, கைது செய்தனர்.பொன்னேரி கிளை சிறையில், ஹேம்நாத் அடைக்கப்பட்டுள்ளார்.

சித்ராவும், ஹேம்நாத்தும் பதிவு திருமணம் செய்ததால், தற்கொலை குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது. ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ நேற்று முன்தினம், சித்ராவின் தாய் விஜயா உள்ளிட்டோரிடம் விசாரித்தார். நேற்று சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், மாமியார் வசந்தாவிடம், நான்கு மணி நேரம் விசாரித்தார்.

ஹேம்நாத் கைது குறித்து போலீசார் கூறியதாவது: ஹேம்நாத் ஒரு சந்தேக பேர்வழி. 'குடி'போதைக்கு அடிமையானவர். மனைவி சித்ரா, நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பதை, இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், 'இன்று எந்த நடிகரோடு, ஆட்டாம் போட்டாய்' எனக்கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். சித்ராவை, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் நடித்து வரும், ஆண் நடிகருடன் இணைத்து பேசிஉள்ளார். இது, சித்ராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்றும், சந்தேகம் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சித்ராவின் மனம் புண்படும்படி ஹேம்நாத் பேசியுள்ளார். இதனால், கணவரை அறையை விட்டு வெளியே அனுப்பிய சித்ரா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. எனவே, தற்கொலைக்கு துாண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டு உள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


'வேறு ஏதோ நடக்கிறது'



ஹேமநாத் தந்தை ரவிசந்திரன் கூறியதாவது:சித்ரா சம்பாதிக்கும் பணத்தை, நாங்கள் ஒரு நாளும் கேட்டதில்லை. வரதட்சணையாகவும், எதுவும் கேட்கவில்லை. 'உங்கள் பெண்ணிற்கு, நீங்கள் என்ன செய்ய விருப்புகிறீர்களோ... அதை செய்யுங்கள்' என்று தான், சித்ராவின் பெற்றோரிடம் கூறினோம். விசாரணைக்கு ஆஜராக இருந்த என் மகனை, அவசர கதியில், போலீசார் கைது செய்துள்ளனர். என்ன நடக்கிறது; யாரை காப்பாற்ற பார்க்கின்றனர் என, தெரியவில்லை; வேறு ஏதோ நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X