பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 அதிகரிப்பு

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், இரு வாரங்களில், வீட்டு சிலிண்டர் விலை, மீண்டும், 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 710 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பொதுத்துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், சமையல் காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்கின்றன.அந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில்,

சென்னை:தமிழகத்தில், இரு வாரங்களில், வீட்டு சிலிண்டர் விலை, மீண்டும், 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 710 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், சமையல் காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்கின்றன.

அந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதம்தோறும், 1ம் தேதி, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. அதன்படி, நவம்பரில், 1,354 ரூபாய்க்கு விற்பனை யான வணிக சிலிண்டர் விலை, இம்மாதம், 56.50 ரூபாய் அதிகரித்து, 1,410.50 ரூபாயாக உள்ளது. அன்று வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யவில்லை.திடீரென, 2ம் தேதி, வீட்டு சிலிண்டர் விலை, 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 610 ரூபாயில் இருந்து, 660 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் வீட்டு சிலிண்டர் விலை, 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 710 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த விலைக்கு சிலிண்டர் வாங்கியதும், வாடிக்கையாளரின் வங்கி கணக்கில், மத்திய அரசின் சார்பில், மானிய தொகை செலுத்தப்படும்.அதேபோல், வணிக சிலிண்டர் விலை, 36 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 1,446.50 ரூபாயாகிஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X