பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டங்கள் செயலாக்கம் ஒத்திவைப்பு

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை:மத்திய அரசின், புதிய வேளாண் சட்டங்கள் செயலாக்கத்தை, சட்டசபை தேர்தல் வரை தள்ளிப்போட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த அதிகாரம் மற்றும் பாதுகாப்பு; விவசாய விளைபொருட்கள் வணிகம் ஊக்குவித்தல்; அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்தம் ஆகிய, மூன்று புதிய சட்டங்களை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதிய சட்டங்களை அமல்படுத்தினால்,

சென்னை:மத்திய அரசின், புதிய வேளாண் சட்டங்கள் செயலாக்கத்தை, சட்டசபை தேர்தல் வரை தள்ளிப்போட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த அதிகாரம் மற்றும் பாதுகாப்பு; விவசாய விளைபொருட்கள் வணிகம் ஊக்குவித்தல்; அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்தம் ஆகிய, மூன்று புதிய சட்டங்களை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதிய சட்டங்களை அமல்படுத்தினால், 'கமிஷன் ஏஜன்டு' முறை ஒழியும். எந்த இடத்தில் இருந்தும், 'ஆன்லைன்' வாயிலாக, லாபகரமான விலையில் பொருட்களை, விவசாயிகள் விற்பனை செய்யலாம். பொருட்களுக்கு முன்பே விலை நிர்ணயம் செய்யப்படுவதால், விலை வீழ்ச்சியில் இருந்து, விவசாயிகள் தப்பிக்க முடியும்.

இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என டில்லியில், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சட்டங்களை, தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு விதிகள் வகுக்கும் பணிகள், வேளாண் வணிகப் பிரிவு வாயிலாக தீவிரமாக நடந்து வந்தன. கோழி வளர்ப்பு, கொகோ, மக்காசோளம் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வருமானம் தரும் வகையில், ஜன., மாதம் பண்ணை ஒப்பந்த சட்டங்களை செயல்படுத்தவும், அரசால் திட்டமிடப்பட்டது.

நாட்டிலேயே முதல் மாநிலமாக, இத்திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு நடந்து வந்தது. டில்லியில், விவசாயிகளின் போராட்டம் காரணமாக, இச்சட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்துமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. இதனால், தமிழகத்தில் சட்ட விதிகள் வகுக்கும் பணிகள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சட்டசபை தேர்தல் வரை, இச்சட்டங்கள் செயலாக்கத்தை தள்ளிப் போடுவதற்கு, அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X