திருத்தணி : திருத்தணி பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்படும், 79 ஏரிகளில், 52 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மீதமுள்ள ஏரிகளுக்கு, 75 சதவீதம் தண்ணீர் வந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில், மொத்தம், 79 ஏரிகளை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், 'நிவர், புரெவி' புயலால், 10 நாட்களுக்கு மேலாக பெய்த தொடர் மழையால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன.இதுதவிர, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் செல்வதால், அதன் மூலம் சில ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
இது குறித்து, திருத்தணி பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:திருத்தணி கோட்டத்தில், இதுவரை, 52 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகளில், தற்போது, 75 சதவீதம் வரை தண்ணீர் வரத்துள்ளது.இன்னும், மழை பெய்தால், 27 ஏரிகளும் நிரம்பி, உபரி நீர் கடைவாசல் வழியாக வெளியேறும். ஏரிகளின் கரைகளின் பலவீனம் அடைந்துள்ளதை உடனடியாக கண்டுபிடித்து, முன்னெச்சரிக்கையாக மணல் மூட்டைகள் போட்டு கரைகள் பலப்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE