சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிண்டி இன்ஜி., கல்லுாரியில் கொரோனா சோதனை

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை:அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரியில் படிக்கும், 700 மாணவர்களுக்கு, கொரோனா பரிசோதனை துவங்கியுள்ளது. தமிழகத்தில், 7ம் தேதி முதல், கல்லுாரி கள் திறக்கப்பட்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுதும்கல்லுாரி விடுதிகளும், அங்குள்ள உணவகங்களும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.,யில், 183 பேருக்கு,

சென்னை:அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரியில் படிக்கும், 700 மாணவர்களுக்கு, கொரோனா பரிசோதனை துவங்கியுள்ளது.

தமிழகத்தில், 7ம் தேதி முதல், கல்லுாரி கள் திறக்கப்பட்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுதும்கல்லுாரி விடுதிகளும், அங்குள்ள உணவகங்களும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.,யில், 183 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. உணவு விடுதிக்கு வந்த மாணவர்களிடம், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுதும் உள்ள கல்லுாரிகளில், அறிகுறி உள்ள இடங்களில் கொரோனா பரிசோதனை நடத்த, உயர் கல்வித் துறையும், சுகாதாரத் துறையும் உத்தரவிட்டு உள்ளன. அதன்படி, சென்னை அண்ணா பல்கலையில் உள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரியில், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை துவங்கியுள்ளது.


காய்ச்சல்

கல்லுாரியில் படித்த மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால், அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுவதாக, கல்லுாரி முதல்வர் இனியன் தெரிவித்து உள்ளார். இதேபோல், கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை நடத்த, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X