சம்பவம் செய்தி

தமிழ்நாடு

* போலீஸ் டைரி

Added : டிச 15, 2020
Share
Advertisement
நீரில் மூழ்கியவர் இறப்புஊத்துக்கோட்டை: திருவண்ணாமலை, அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 55. இவர், மாகரல் கிராமத்தில், உறவினர் வீட்டில் தங்கி, செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், கடந்த, 13ம் தேதி, அருகில் உள்ள குளத்தில் துணி துவைக்க செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.குளத்து நீரில் மூழ்கி தத்தளித்த இவரை, மீட்டு, சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு

நீரில் மூழ்கியவர் இறப்பு

ஊத்துக்கோட்டை: திருவண்ணாமலை, அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 55. இவர், மாகரல் கிராமத்தில், உறவினர் வீட்டில் தங்கி, செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், கடந்த, 13ம் தேதி, அருகில் உள்ள குளத்தில் துணி துவைக்க செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.குளத்து நீரில் மூழ்கி தத்தளித்த இவரை, மீட்டு, சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் இறந்தார்.

கஞ்சா விற்றவருக்கு 'காப்பு'

வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, புதுசத்திரம் பகுதியில், போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற வாலிபரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர்.இதில், அதே பகுதியைச் சேர்ந்த ராம் மகன் தீபக், 23, என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, வெள்ளவேடு போலீசார், தீபக்கை கைது செய்து, அவரிடமிருந்து, 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வழிப்பறி செய்த ஐவர் கைது

சோழவரம்: சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர், அகிலேஷ், 20, மற்றும் அவரது நண்பர்கள், கடந்த, 9ம் தேதி இரவு, சோழவரம் ஏரிக்கரை அருகே, மது அருந்தினர். அப்போது, ஐந்து பேர் கும்பல், அகிலேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி, மொபைல் போன், பணம், டூ - வீலர் ஆகியவற்றை பறித்தது. அப்போது மாயமான அகிலேஷ், 11ம் தேதி, சோழவரம் ஏரியில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.சோழவரம் போலீசார் விசாரித்து, இந்த வழிப்பறியில் தொடர்புடைய, சென்னை, கொடுங்கையூர், கே.கே.டி., நகரைச் சேர்ந்த, 18 வயதுடைய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X