மாமல்லபுரம் : பேரூர், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு, ஆபத்தாக இருப்பதால், விபத்தை தடுக்க, தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி - பேரூர், கிழக்கு கடற்கரை சாலையில், திருப்போரூர் சாலை இணைகிறது.திருப்போரூரில் உள்ள தாலுகா, வட்டார வளர்ச்சி, சார் - பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கந்தசுவாமி கோவிலுக்கு செல்ல, கடற்கரை சாலையை, சென்னை பகுதியினர் பயன்படுத்துகின்றனர். இவர்கள், பேரூர் சாலை சந்திப்பை கடந்தே, திருப்போரூர் செல்ல வேண்டும்.
சந்திப்பில், கிழக்கு கடற்கரை சாலை உயர்ந்து, திருப்போரூர் சாலை தாழ்ந்து, ஆபத்தான சரிவாக உள்ளது.பேரூர் - திருப்போரூர் இருவழி தடத்திலும், தொடர்ந்து வாகனம் கடக்கும் நிலையில், குறுகிய சந்திப்பு பகுதியில், ஓட்டுனர் கவனக்குறைவு காரணமாக, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது; உயிரிழப்பும் அதிகரிக்கிறது.
இச்சந்திப்பில், முறையான போக்குவரத்திற்கேற்ப, திருப்போரூர் சாலை மட்டத்தை, உயர்த்த வேண்டும். விபத்தை தவிர்க்க, கிழக்கு கடற்கரை சாலையில், வாகனத்தின் வேகம் குறைக்க, தடுப்புகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE