பொது செய்தி

தமிழ்நாடு

நாற்று நடவு துவக்கிய விவசாயிகள்

Added : டிச 15, 2020
Share
Advertisement
வாலாஜாபாத் : ஏரி நீரை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், உழவு மற்றும் நாற்று நடவு செய்யும் பணிகளை துவக்கி உள்ளனர்.ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், 909 பொதுப்பணித் துறை ஏரிகள் உள்ளன. 'நிவர், புரெவி' புயலால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 321 ஏரிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், 477 ஏரிகள் நிரம்பி உள்ளன.இந்த ஏரி நீரை நம்பி, 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில், நெல்

வாலாஜாபாத் : ஏரி நீரை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், உழவு மற்றும் நாற்று நடவு செய்யும் பணிகளை துவக்கி உள்ளனர்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், 909 பொதுப்பணித் துறை ஏரிகள் உள்ளன. 'நிவர், புரெவி' புயலால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 321 ஏரிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், 477 ஏரிகள் நிரம்பி உள்ளன.இந்த ஏரி நீரை நம்பி, 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில், நெல் சாகுபடி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோவிந்தவாடி, தென்னேரி, திருவங்கரணை உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலங்களில் உழவு மற்றும் நாற்று நடவு செய்யும் பணியை துவக்கி உள்ளனர்.கடந்த பருவத்தைவிட, நடப்பு பருவத்தில், நாற்று பறிக்க, நடவு செய்ய, வரப்பு கழிக்க உள்ளிட்ட பல பணிகளுக்கு, 50 ரூபாய், கூடுதலாக கூலி உயத்தப்பட்டு உள்ளது என, கூலி தொழிலாளர்கள் மகிழ்சியுடன் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X