பொது செய்தி

தமிழ்நாடு

இருளர்கள் பாம்பு பிடிக்க புதிய வாகனம் வழங்கல்

Added : டிச 15, 2020
Share
Advertisement
செங்கல்பட்டு : வட நெம்மேலி, இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு, புதிய வாகனத்தை, கலெக்டர் ஜான்லுாயிஸ் வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், புனித தோமையர்மலை ஆகிய வட்டாரங்களில், ஊரக புத்தாகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன், 'கோவிட் - 19' சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள், 939

செங்கல்பட்டு : வட நெம்மேலி, இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு, புதிய வாகனத்தை, கலெக்டர் ஜான்லுாயிஸ் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், புனித தோமையர்மலை ஆகிய வட்டாரங்களில், ஊரக புத்தாகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன், 'கோவிட் - 19' சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள், 939 பேருக்கு, 1.48 கோடி ரூபாய்; தனிநபர் தொழில் முனைவோர், 1,445 பேருக்கு, 4.76 கோடி ரூபாய்; இரண்டு உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கு, 20 லட்சமும், 55 உற்பத்தியாளர் குழுக்களுக்கு, 82.5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

தவிர, சொந்த ஊர் திரும்பிய, 80 இளைஞர்களுக்கு, புதிய தொழில் துவங்க, 8-0 லட்சம் ரூபாய் என, மொத்தம், 8.16 கோடி ரூபாய் நிதி உதவி, கலெக்டர் அலுவலகத்தில், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு, நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.மேலும், திருப்போரூர் அடுத்த, வட நெம்மேலி ஊராட்சியில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற் கூட்டுறவு சங்கத்திற்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய டெம்போ டிராவலரை, கலெக்டர் ஜான்லுாயிஸ் வழங்கினார்.ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X