மஹாராஷ்டிரா ரக நெல் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி வி.எம்.பார்த்தசாரதி கூறியதாவது:மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய ரக நெல்லில், எச்.எம்.டி., ரக நெல்லும் ஒன்று. இது, நம்மூர் மண்ணுக்கு, நன்றாக வளரக்கூடிய சன்ன ரகம்.இந்த நெல் நடவு செய்து, 130 நாட்களில் அறுவடைக்கு வரும். பொதுவாக, பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்யும்போது, நாம், இயற்கை உரங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு பயன்படுத்தும்போது, அரிசியின் அளவு மாறாமல் இருக்கும்.சில நேரங்களில் அதிக விளைச்சல் கிடைக்கட்டும் என்பதற்கு, பஞ்சகாவ்யா இயற்கை உரத்தை கூடுதலாக வழங்கினால், அரிசி ரகம் மாறிவிடும். எந்த ஒரு பாரம்பரிய ரக நெல்லாக இருந்தாலும், உர நிர்வாகம் பக்குவமாக கையாள வேண்டும்.எச்.எம்.டி., ரக நெல், நம்மூர் மண்ணுக்கு, 26 மூட்டைகள் வரை மகசூல் அளிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 97890 94118
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE