பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ரக புடலங்காயில் கூடுதல் மகசூல் பெறலாம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
'கோவை எச்- 1' புடலங்காய் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியை முனைவர் காயத்ரி கூறியதாவது:தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலமாக, 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, புதிய ரக புடலங்காய், கோவை எச் 1. இது, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஏற்ற ரகம். ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில், இது போன்ற ரக

'கோவை எச்- 1' புடலங்காய் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியை முனைவர் காயத்ரி கூறியதாவது:தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலமாக, 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, புதிய ரக புடலங்காய், கோவை எச் 1. இது, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஏற்ற ரகம். ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில், இது போன்ற ரக புடலங்காய் சாகுபடி செய்யலாம். விதைத்த நாளில் இருந்து, 170 நாட்கள் வளரக்கூடிய செடி.இதன் காய், மங்கிய வெள்ளை நிறத்தில் இருக்கும். இது போன்ற ரக காய்களுக்கு, அடி சாம்பல், சாம்பல், இலை புள்ளி ஆகிய நோய் தாக்கம் குறைவாக இருக்கும்.நோய் கட்டுப்பாடு மற்றும் நீர் பாசனத்தை முறையாக கவனித்தால், 1 ஏக்கருக்கு, பிற ரக புடலங்காயைவிட, கோவை- எச் -1 ரக புடலங்காயில், 15 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 94420 91883

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X