கருங்கால் கோழி முட்டை விற்பனை குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கூரம் கேட் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் விவசாயி எம். நிர்மலாதேவி கூறியதாவது:கருங்கால் கோழி வளர்த்தால், அனைத்து விதங்களிலும் வருவாய் ஈட்டலாம். குறிப்பாக, மருத்துவ குணம் நிறைந்த இக்கோழியின் இறைச்சி மற்றும் முட்டைகளில் நல்ல வருவாய் கிடைக்கிறது. இதை, சந்தைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கிறது.
இறைச்சியை, அதிக விலை கொடுத்து, ஒரு சிலரே வாங்குவர்; முட்டை அவ்வாறு இல்லை.நாட்டுக்கோழி முட்டை, 15 ரூபாய் கொடுத்து வாங்கும் மக்கள், இரட்டிப்பு விலை கொடுத்து, கருங்கால் கோழி முட்டை வாங்க தயக்கம் காட்டுவதில்லை.திறந்தவெளி முறையில், கருங்கால் கோழிகளை வளர்த்து வருகிறேன். இதன் முட்டைகளை, வீடு தேடி வருவோருக்கு, 30 ரூபாய்க்கு விற்கிறேன். தபால் மூலமாக கேட்போருக்கு, 35 ரூபாய்க்கு அனுப்புகிறேன்.கோழி குஞ்சு பொறித்து கொடுத்தால், இரட்டிப்பு வருவாய் ஈட்டலாம். இதன் மூலம், கணிசமான வருவாய் ஈட்ட முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்தொடர்புக்கு: 86670 42235
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE