பொது செய்தி

தமிழ்நாடு

கடலரிப்பு தடுப்பு, இறங்குதளம் பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு

Added : டிச 15, 2020
Share
Advertisement
மாமல்லபுரம் : கல்பாக்கம் மீனவ பகுதிகளில், கடலரிப்பு தடுப்பு, மீன் இறங்குதளம் அமைக்க, அண்ணா பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு நடத்தினர்.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம், வாயலுார் - உய்யாலிகுப்பம் மீனவ பகுதிகளில், கடல்சீற்ற கடல் அரிப்பால், கடற்கரை அழிகிறது.மீன்பிடி படகு, வலைகளை, பாதுகாப்பாக வைக்க இடமில்லாமலும், வசிப்பிடத்திற்கு ஆபத்து இருப்பதாலும்,

மாமல்லபுரம் : கல்பாக்கம் மீனவ பகுதிகளில், கடலரிப்பு தடுப்பு, மீன் இறங்குதளம் அமைக்க, அண்ணா பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம், வாயலுார் - உய்யாலிகுப்பம் மீனவ பகுதிகளில், கடல்சீற்ற கடல் அரிப்பால், கடற்கரை அழிகிறது.மீன்பிடி படகு, வலைகளை, பாதுகாப்பாக வைக்க இடமில்லாமலும், வசிப்பிடத்திற்கு ஆபத்து இருப்பதாலும், மீனவர்கள் பரிதவிக்கின்றனர்.பாதிப்பை தவிர்க்க, கடலரிப்பு கல் தடுப்பு அமைக்க வேண்டும் என, மீனவர்கள், அரசிடம் வலியுறுத்தினர்.

இதை பரிசீலித்த, மீன்வள துறை, இரு பகுதிகளின், ஒருங்கிணைந்த கடற்கரையில், நேர்கல் தடுப்பு, மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்கு, மீன் இறங்குதளம் என, 17 கோடி ரூபாய் மதிப்பில், அமைக்க உள்ளது.திட்டப் பணிகளை மேற்கொள்ள, துறை இன்ஜினியரிங் பிரிவினர், ஏற்கனவே ஆய்வு நடத்தினர்.இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக குழுவினர், கடற்கரை பரப்பு நிலமட்டம், கடல் நீர் பரவல், மண் தன்மை உள்ளிட்டவை குறித்து, நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X