நடனம் ஆடும்படி வற்புறுத்தியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

Added : டிச 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பரேலி:உத்தர பிரதேசத்தின் பரேலியில், நடனம் ஆடும்படி மணமகனின் நண்பர்கள் வற்புறுத்தியதால், மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள பரேலி மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், கண்ணோச் மாவட்ட பெண்ணுக்கும் திருமணம் முடிக்க, பெற்றோர் முடிவு செய்தனர்.திருமணத்திற்காக இரு

பரேலி:உத்தர பிரதேசத்தின் பரேலியில், நடனம் ஆடும்படி மணமகனின் நண்பர்கள் வற்புறுத்தியதால், மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள பரேலி மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், கண்ணோச் மாவட்ட பெண்ணுக்கும் திருமணம் முடிக்க, பெற்றோர் முடிவு செய்தனர்.திருமணத்திற்காக இரு குடும்பத்தினரும், பரேலியில் உள்ள மண்டபம் வந்திருந்தனர்.

திருமணத்திற்கு முதல்நாள் இரவு, மணமக்களுக்கான சடங்குகளை உறவினர்கள் செய்தனர். பின், இசை நிகழ்ச்சி துவங்கியதால் அனைவரும் நடனமாடினர். மணமகனின் நண்பர்கள் சிலர், நடனம் ஆடும்படி மணமகளை வற்புறுத்தினர். அதற்கு மறுத்த அவரை, நடனமாடும் இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

மணமகன் அவர்களை தடுக்காததால், ஆத்திரம் அடைந்த மணப்பெண், பெற்றோர் உதவியுடன் திருமணத்தை நிறுத்தினார். இதனால், இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு போலீஸ் ஸ்டேஷன் சென்றது.மணமகன் குடும்பத்தினர் மீதான வரதட்சணை புகாரை ஏற்க மறுத்த போலீசார், பேச்சு வாயிலாக தீர்வு காணும்படி கூறினர். திருமணச்செலவு முழுவதையும், மணமகள் வீட்டார் தான் ஏற்றிருந்தனர்.

இதையடுத்து, திருமணச் செலவுத் தொகையாக, 6.5 லட்சம் ரூபாய் வழங்குவதாக, மணமகன் வீட்டார் கூறினர். இதனால், பிரச்னை முடிவுக்கு வந்தது. சுயமரியாதை காரணமாக மணப்பெண் திருமணத்தை நிறுத்தும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. நடனத்தால் பிரிந்த மணமக்கள் இருவரும், முதுகலை பட்டதாரிகள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
16-டிச-202003:37:00 IST Report Abuse
.Dr.A.Joseph திருமணத்தின் போது மணமக்கள் ஆடுவதை ஆதரிப்பதில்லை. மணமகளுக்கு வாழ்த்துகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X